ஒன்றைச் சிறப்பிப்பதற்காக உண்மையை மறுத்துப் பிறிதாக உரைப்பது அவநுதி அணி.
பாடல் - எடுத்துக்காட்டு
பொங்கு அளகம் அல்ல புயலே இது இவையும்கொங்கை இணை அல்ல கோங்கு அரும்பே - மங்கை நின்மை அரிக் கண் அல்ல மதர் வண்டு இவை இவையும்கை அல்ல காந்தள் மலர்.
பாடல் - செய்தி
மங்கையே
உன் தலையில் இருப்பது பொங்கும் கூந்தல் அல்ல. கருநிற மேகம்.உன் மார்பில் இருப்பவை முலைகள் அல்ல. கோங்கம் பூவின் அரும்புகள்உன் முகத்தில் இருப்பவை கண்கள் அல்ல. மதமதப்பு உள்ள வண்டுகள்உனக்கு இருப்பவை கைகள் அல்ல. காந்தள் மலர்கள்.
பாடலில் அணி
இந்த உருவகப் பாடலில் உண்மைகள் மறுக்கப்பட்டுள்ளதால் அவநுதி உருவகம்
தண்டியலங்காரம் PDF பக்கம் 96 | நூல் பக்கம் 71
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment