Pages

Wednesday, 28 May 2025

தண்டியலங்காரம் - சிலேடை உருவகம்

ஒரு சொல் அல்லது தொடர் 
பல பொருள் தரும்படி
இரட்டுற மொழிதல்
சிலேடை அணி
உருவக அணி சிலேடையாக வரும்படிப் பாடுவது சிலேடை உருவகம்

பாடல் - எடுத்துக்காட்டு

உள் நெகிழ்ந்த செவ்வித்தாய்ப் பொன் தோட்டு ஒளி வளரத்
தண் அளி சூழ்ந்து இன்பம் தர மலர்ந்து - கண்ணெகிழ்ந்து
காதல் கரை இறப்ப வாவி கடவாது
மாதர் வதனாம்புயம் 

பாடல் - செய்தி

அம்புயம் (தாமரை)

இதழ்கள் உள்ளே நெகிந்து காணப்படும்
இதழ்களில் பொன் நிற ஒளி வளரும்
வண்டுகள் வட்டமிடும்
கண்ணுக்கு இன்பம் தரும்படி மலரும் 
தேன் வழியும்
ஆசையை மூட்டும்
குளத்தை விட்டு நீங்காது

பெண்ணின் முகம் 

உள்ளம் நெகிழும்படிக் காட்சி தரும். 
காதுத் தோட்டின் பொன்னொளி வளரும். 
குளுமையும் இன்பமும் தரும்படி மலரும். 
கண் பார்வையில் இன்பம் தரும் இரக்க உணர்வு தோன்றும். 
என் ஆவியிலிருந்து நீங்காது. 

பாடலில் அணி

இந்தப் பாடலில் முகம் தாமரையாக உருவகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பாடல் சிலேடையாகவும் வருகிறது. எனவே இந்தப் பாடல் சிலேடை உருவக அணி. 

தண்டியலங்காரம் PDF பக்கம் 97 | நூல் பக்கம் 72
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment