உருவகப் பொருள்களை பொருத்திக் காட்டுவது இயைபு உருவகம்
பாடல் - எடுத்துக்காட்டு
ஏரி இரண்டும் சிறகா எயில் வயிறாக்காருடைய பீலி கடி காவா - நீர் வண்ணன்அத்தியூர் வாயா அணி மயிலே போன்றதேபொற்றேரான் கச்சிப் பொலிவு
பாடல் - செய்தி
காஞ்சிபுரம் மயில் போல் விளங்குகிறதுஎப்படிகாஞ்சிபுரத்தின் இரண்டு பக்கமும் உள்ள ஏரிகள் மயிலின் சிறகுகள்.மதில்கள் மயிலின் வயிறு.அதன் காடுகள் மயிலின் தோகைகள்.வரதராசப் பெருமாள் கோயில் மயிலின் வாய்.இப்படிக் காஞ்சிபுரம் அழகிய மயில் போல் விளங்குகிறது.
பாடலில் அணி
மயிலின் சிறகு, வயிறு, தோகை, வாய் ஆகியவை பொருத்திக் (இயைத்துக்) காட்டப்பட்டுள்ளதால் இயைபு உருவகம்
தண்டியலங்காரம் PDF பக்கம் 99 | நூல் பக்கம் 74
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment