Pages

Wednesday, 28 May 2025

தண்டியலங்காரம் - வேற்றுமை உருவகம்

பாடல் - எடுத்துக்காட்டு 

வையம் புரக்குமால் மன்னவ நின் கைக் காரும் 
பொய் இன்றி வானில் பொழி காரும் - கையாம்
இரு கார்க்கும் இல்லை பருவம் இடிக்கும் 
ஒரு கார் பருவம் உடைத்து

செய்தி 

மன்னவ
கொடை வழங்கும் உன்னுடைய கைகளாகிய கார்மேகம்
பருவம் பொய்க்காமல் பொழியும் மழைமேகம்
இரண்டும் வையம் புரக்கும் மேகங்கள்
வானில் இடி முழங்கும் ஒரு மேகம் பொழிவதற்குப் பருவ காலம் உண்டு
உன் இரண்டு கை மேகங்கள் பொழிவதற்குப் பருவகாலம் இல்லை

அணி விளக்கம்

மழை கொடுக்கும் மேகம்
கொடை வழங்கும் கைகள்
இரண்டுக்கும் வையம் புரத்தலால் ஒற்று கொண்டவை
பருவம் பார்த்தல், பருவம் பாராமை - ஆகியவற்றால் வேற்றுமை கொண்டவை


தண்டியலங்காரம் PDF பக்கம் 96 | நூல் பக்கம் 71
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment