Pages

Wednesday, 28 May 2025

தண்டியலங்காரம் - ஏது உருவகம்

பாடல் - எடுத்துக்காட்டு

மாற்றத்தால் கிள்ளை நடையால் மட அன்னம் 
தோற்றத்தால் தண் என் சுடர் விளக்கம் - போற்றும்
இயலால் மயில் எம்மை இந் நீர்மை ஆக்கும் 
மயல் ஆர் மதர் நெடுங்கண் மான்

அணி விளக்கம்

எதனால் 
இது போன்ற நிலை 
என்று விளக்கிக் கூறும் உருவகம் 
ஏது உருவகம்

செய்தி

  • மருண்டு பார்க்கும் மதர் பார்வை கொண்ட இவள் ஒரு மான் போன்ற பெண் 
  • மழலைப் பேச்சால் இவள் கிளி
  • மெதுவான நடையால் இவள் அறியா அன்னம் 
  • தோற்றத்தால் ஒளி தரும் விளக்குச் சுடர்
  • சாயல் இயல்பால் மயில்
  • இவளது இந்தத் தோற்றம் என்னை ஏங்கும் நிலைக்கு உள்ளாக்கியிருக்கிறது
தண்டியலங்காரம் PDF பக்கம் 95 | நூல் பக்கம் 70
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment