Pages

Tuesday, 20 May 2025

செய்யுளில் வலி

தொகைநிலைத் தொடர் சொற்கள் மிகுதியாக வரப் பாடும் செய்யுள் வலி என்று கூறப்படும். 

கால் நிமிர்ந்தால் கண் பரிவ வல்லியோ, புல்லாதார்
மான் அனையார் மங்கல நாண் அல்லவோ - தான
மழைத் தடக்கை வார் கழல் கால் மான வேல் கிள்ளி
புழைத் தடக்கை நால்வாய் பொருப்பு 

  • கிள்ளி தனம் தருவதில் மழை போன்ற கையை உடையவன் 
  • கழல் அணிந்த காலை யானைச் சேனத்தில் இருக்கும் வாரில் வைத்திருப்பவன் 
  • அவன் உள்ளே துளை இருக்கும் கையினை உடையது
  • பெரிய வாயினை உடையது
  • மலை போன்ற தோற்றம் கொண்டது
  • அதன் கால் போரில் நடந்தால் கண்ணால் பார்க்க முடியுமா
  • அவனோடு சேர்ந்திருக்காதவர் மனைவியின் மங்கல நாண் அல்லவா கண்ணால் பார்க்க முடியாமல்  போய்விடும். 

  • மழைத்தடக்கை
  • வார்கழல்
  • கழற்கால்
  • மானவேற்கிள்ளி
  • புழைத்தடக்கை
  • நால்வாய் - என்பன இப்பாடலில் வரும் தொகைச்சோற்கள். 

செங்கலசக் கொங்கைச் செறி குறங்கின் சீறடிப் பேர்
பொங்கு அரவ அல்கும் பொரு கயல் கண் - செங்கனி வாய்க்
காருருவக் கூந்தல் கதிர் வளைக்கைக் காரிகைத்தாம்
ஓரு உரு என்று உள்ளதே உண்டு

  • நெங்குத்தாக நிமிர்ந்து நிற்கும் கலசம் போன்ற கொங்கை
  • நெருக்கமாக இருக்ககும் கால் தொடைகள் 
  • சிறிய காலடி 
  • படமெடுக்கும் பாம்பு போன்ற அல்குல் 
  • போரிடும் கயல் மீன்கள் போன்ற கண்கள் 
  • சிவந்திருக்கும் கோவைப்பழம் போன்ற வாய் 
  • கார்மேகம் போன்ற கூந்தல் 
  • ஒளிரும் வளையலணிந்த கை 
  • இத்தனையும் காரிகை என்னும் ஓர் உருவில் இருக்கிறது. 

  • இப்பாடலில் இதுக்கும் தொகைச்சொற்களையும் கண்டுகொள்க    

மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment