Pages

Tuesday, 20 May 2025

செய்யுளில் காந்தம்

உலகியல் வழக்கத்துக்கு மாறுபடாமல் புகழ்வது செய்யுளில் வரும் காந்தம்

ஒரு பேர் உணர்வுடனே ஒண் இறையும் தேய
வருமே துறவு என்பால் வைத்த - ஒரு பேதை
போது அளவு வாசப் புரிகுழல் சூழ் வாள் முகத்துக்
காது அளவு நீண்டு உலவும் கண்

  • நான் என் பெருமையைக் காப்பாற்றும் உணர்வு உடையவன்
  • அது என் இறைமை உணர்வு
  • அது தேயும்படி
  • நான் என்னையே துறக்கும்படி
  • ஒரு பேதைப் பெண் 
  • மணக்கும் மலரணிந்த கூந்தல்
  • ஒளிறும் முகம் 
  • அதில் காது வரையில் நீண்ட கண் - கொண்டவள்
  • அவள் கண்ணின் பார்வை 
  • என் இறைமை உணர்வைத் தேய்த்துவிட்டது. 
இது உலக வழக்கத்துக்கு மாறுபடாமல் புகழ்ந்ந வைதருப்ப நெறி


ஐயோ அகல் அல்குல் சூழ்  வருதற்கு ஆழித்தேர் 
வெய்யோற்கு அனேக நாள் வேண்டுமால் - கை பரந்து
வண்டு இசைக்கும் கூந்தல் மதர் விழிகள் சென்று உலவ
எண் திசைக்கும் போதா இடம் 

  • இவள் வண்டுகள் பாடும் கூந்தல் உடையவள்
  • இவள் பார்வை உலாவ எட்டுத் திசைப் பரப்பும் போதாது
  • இவள் அல்குல் அகலமானது 
  • அதனைச் சுற்றி வர சூரியனுக்கும் பல நாள் வேண்டும்
  • ஐயோ 
  • இப்படி இருக்கிறாளே 
இது உலக வழக்கத்துக்கு மாறுபட்டுப் புகழ்ந்த கௌட நெறி

அங்கண் மா ஞாலத்து அகல் விசும்பை முன் படைத்த 
பங்கயத்தோன் அந்நாளில் பைந்தொடி தன் - கொங்கைத்
தடம் பெருக ஓங்கும் எனத் தான் நினையாவாறோ
இடம் பெருகச் செய்யா இயல்பு 

  • உலகில் வானத்தைப் படைத்த பிரமன் இவளைப் படைக்குபோது  இவள் கொங்கை பெருக்குமே. அகன்ற வானமே அதற்குப் போதாதே என்று நினைத்துப் பார்க்கவில்லை
இது உலக வழக்கத்துக்கு மாறாகப் புகழ்ந்த கௌட நெறி


மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment