செய்யுளில் உய்த்துணர வேண்டிய செய்தியை வெளிப்படையாகவோ, மறைத்தோ கூறுவது உய்த்தலில் பொருண்மை என்று கூறப்படும்
இன்று உமையாள் வாள் முகம் கண்டு ஏக்கற்றோ
அன்றி விட அரவை அஞ்சியோ - கொன்றை
உளராவாறு ஓடும் ஒளிர் சடையீர் சென்னி
வளராவாறு என்னோ மதி
- சிவன் தலையில் இருக்கும் நிலாவும் சில நாள் வளர்வதில்லை. ஏன்? உமையவள் முகத்தைக் கண்டு அதுபோல் இருக்கவேண்டும் நப்பாசையாலோ? வளர்ந்தால் அங்கு இருக்கும் பாம்பு விழுங்கிவிடும் என்னும் அச்சத்தாலோ
இந்தப் பாடல் நிலவு வளராமைக்கான காரணத்தை உய்த்துணர வைக்கிறது.
இன்று உமையாள் மாசிலா வாள் முகம் கண்டு ஏக்கறுமால்
அன்றி விட அரவும் அங்கு உறையும் - கொன்றை
உளராவாறு ஓடும் ஒளிர் சடையீர் சென்னி
வளராவாறு என்னோ மதி
- சிவன் தலையில் இருக்கும் நிலா சில நாள் வளர்வதில்லை. ஏன்?உமையவள் முகம் போல இருக்கவேண்டும் என்று நப்பாசை கொண்டதாலும், வளர்ந்தால் பாம்பு விழுங்கிவிடும் என்னும் அச்சத்தாலும் ஆகும்.
இந்தப் பாடல் நிலவு வளராமைக்கான காரணத்தைச் சொல்கிறது
தண்டியலங்காரம் PDF பக்கம் 49
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment