செய்யுளில் சொல்லப்பட்ட செய்தியால் வேறொரு செய்தியை விளங்க வைப்பது உதாரம் எனப்படும்
செருமான வேல் கிள்ளி தென் உறந்தையார் தம்
பெருமான் முகம் பார்த்த பின்னர் - ஒருநாளும்
பூதலத்தோர் தம்மைப் பொருள் நசையால் பாராவாம்
காதலித்துத் தாழ்ந்து இரப்போர் கண்
- உறந்தைப் பெருமான் கிள்ளியின் முகத்தைப் பார்த்த பின்னர் இரப்போர் உலகில் வேறு யாரையும் பொருளுக்காகப் பார்க்க வேண்டியதில்லை - என்று பாடல் கூறுகிறது.
கிள்ளி வேண்டிய அளவு பொருள் தருவான் என்பதை இது விளங்க வைக்கிறது.
அவிழ்ந்த துணி அசைக்கும் அம்பலமும் சீக்கும்
மகிழ்ந்திடுவார் முன்னர் மலரும் - கவிழ்ந்து
நிழல் துழாம் யானை நெடுந்தேர் இரவி
கழல்தொழா மன்னவர்தம் கை
- சூரிய குலத்து மன்னவன் சோழன்
- அவன் யானை தனக்குப் பகை இல்லையே என்று தன் நிழலோடு போரிடும்
- அந்தச் சோழன் கையைத் தொழாதவர் கை
- கிழிந்த துணியை உடுத்தும்
- படுக்க இடம் இல்லாமல் பொதுமக்கள் உறங்கும் சாவடியைக் கூட்டிக்கொண்டிருக்கும்
- மகிழ்ச்சியோடு உணவளிப்பவர் முன்னர் கையேந்தி நிற்கும்
சோழனைப் பகைத்துக்கொண்டால் தோல்வி உறுதி என்பது இதனால் பெறப்படும் செய்தி.
தண்டியலங்காரம் PDF பக்கம் 48
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment