Pages

Monday, 19 May 2025

செய்யுளில் - ஒழுகிசை

வெறுக்கத் தக்க இன்னா இசை இல்லாமல் வரும்படிப் பாடப்பட்ட பாடல் ஒழுகிசை எனப்படும். இந்தப் பாடலில் அதனைக் காணலாம்.

இமையவர் மோலி இணைமலர்த் தாள் சூடச்
சமயந்தொறும் நின்ற தையல் - சிமய
மலைமடந்தை வாச மலர்மடந்தை எண்ணெண்
கலைமடந்தை நாவலோர் கண். 

  • வானோர் வணங்கும்
  • மலைமகள்
  • மலர்மகள்
  • கலைமகள்
  • அகியோர் நாவலர்க்குக் கண்

ஆக்கம் புகழ் பெற்றது ஆவி இவள் பெற்றாள்
பூக்கள் குழல் கார் பொறை பெற்ற - மாக் கடல் சூழ்
மண் பெற்ற ஒற்றைக் குடையாய் வரப்பெற்று எம்
கண் பெற்ற இன்று களி. 
  • செல்வத்துக்குப் புகழ் சேர்ந்தது
  • இவன் உயிர் தழைக்கப் பெற்றாள்
  • இவள் தலையிலுள்ள கூந்தல் மலர்களைத் தாங்குகின்றன
  • மாபலியிடம் மண் பெற்றவனே! நீ வர என் கண் களிப்புறுகிறது
இந்தப் பாடலில் உள்ள செய்திகள் ஒன்றோடொன்று தொடர்பு இல்லாததனவாய்  அறுத்து அறுத்து ஒழுகும் இன்னா ஓசை கொண்டுள்ளது. 

மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment