செய்யுளில் சமாதி என்பதைச் சமாதிச் செய்யுள் எனப் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்கிய பொருளின் வினையை ஒப்புமை உடைய பொருள்மேல் சார்த்திக் கூறுவது சமாதி முறைமை
அகலிரு விசும்பின் பாய் இருள் பருகி
பகல் கான்று எழுதரும் பல்கதிர் பரிதி (பெரும்பாணாற்றுப்படை)
- பரிதி இருளைப் பருகிற்று
கன்னி எயில் (நற்றிணை 54)
- அழியாத கோட்டை
குமரி ஞாழல் (நற்றிணை 54)
- ஞாழல் மரக் கன்று
விழித்த குவளை கழிப் போது வாக்கிய
கள் உண்டு களித்த வண்டு இனம்
- வண்டு கள் உண்டது
கடுக்கை வயல் உழவர் காலை தடிய
மடக்கி அரியுண்ட நீலம் - தடம் சேர்ந்து
நீள் அரி மேல் கண் படுக்கும் நீள் நீர் அவந்தியார்
கோளரி ஏறு இங்கு இருந்த கோ
- நெல் அறுக்கும்போது அறுபட்ட நீல மலர் நெல் அரிமேல் உறங்கும்
இது இரண்டு நெறியார்க்கும் ஒக்கும்
இதனைக் குண-அலங்காரம் என்ப
தண்டியலங்காரம் PDF பக்கம் 52
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment