Pages

Thursday, 22 May 2025

தெரிதரு தேற்ற உவமை

ஐயுற்றதனைத் தேர்ந்து தெளிவது தெரிதரு தேற்ற உவமை

தாமரை நாள் மலரும் தண் மதியால் வீறு அழியும் 
காமர் மதியும் கறை விரவும் - ஆம் இதனால் 
பொன்னை மயக்கும் புனை சுணங்கினார் முகமே
என்னை மயக்கும் இது
  • இவள் முகத்தைத் தாமரை என்றால், நிலா வரும் இரவில் தாமரை தன் பெருமிதத்தை  இழந்துவிடும் 
  • இவள் முகத்தை மதியம் என்றால், மதியில் களங்கம் இருக்கும்
  • சுணங்கு = மகளிர் மேனிநிறம், கூச்ச மெய்ப்பாடு, Tingling 
  • இவள் பொன் போன்ற மேனி நிறம் கொண்டவள்
  • இரவிலும் தன் அழகை இழக்காமல், களங்கமும் இல்லாமல் இருக்கும் இவள் முகம் என்னை மயக்குகிறது
  • (அவன் அவள் அழகைப் பாராட்டுகிறான்)
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

சுணங்கு


No comments:

Post a Comment