ஒரு பொருளுக்கு உவமை கூறி,
அந்த உவமையைக் காட்டிலும்
பொருள் சிறந்தது எனக் கூறுதல்
இன்சொல் உவமை அணி
மான்விழி தாங்கும் மடக்கொடியே நின் வதனம்
மான் முழுதும் தாங்கி வரு மதியம் - ஆனாலும்
முற்றிழை நல்லாய் முகம் ஒப்பது அன்றியே
மற்று உயர்ச்சி உண்டோ மதிக்கு
- மடக்கொடியே
- உன் கண் மானின் கண் போல் மருண்டு பார்க்கிறது
- உன் முகம் மதியம் போல உள்ளது.
- மதியத்தில் மான் முழுவதும் இருக்கிறது. (ஆனால் அது களங்கம்)
- முற்றிழை நல்லாய்
- மதியத்தில் உள்ள மறுவுக்கு மேன்மை உண்டோ (இல்லையே)
தண்டியலங்காரம் PDF பக்கம் 71
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment