Pages

Thursday, 22 May 2025

விபரீத உவமை

தாமரை போல் முகம் மலர்கிறது என்றால் அது உவமை
முகம் மலர்வது போல் தாமரை மலர்கிறது என்றால் அது விபரீத உவமை

திருமுகம் போல் மலரும் செய்ய கமலம் 
கருநெடுங்கண் போலும் கயல்கள் - அரிவை
இயல் போலும் மஞ்ஞை இடை போலும் கொம்பர் 
மயல் போலும் யாம் போம் வழி
  • முகம் போலத் தாமரை மலரும்
  • கண் போலக் கயல் பிறழும்
  • பெண்ணின் இயல் (தோற்றம்) போல, கொம்பில் இருக்கும் மயில் தோன்றும்
  • இவற்றைப் பார்த்து, பித்தன் வழியில் சென்றுகொண்டிருக்கிறேன் 
ஓவத்து அன்ன உண்டு உறை மருங்குல் 
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்
வர்முலை அன்ன வண் முகை உடைத்து 
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை (சிறுபாணானாற்றுப்படை)
  • சுவரில் எழுதப்பட்ட ஓவியம் போலப் பருமன் இல்லாத இடை
  • அதில் முலை என்னும் தாமரை மொட்டு. இந்திரகோபப் பூச்சிகள் போல் பூந்தாதுகள் உதிர்ந்து கிடக்கும் தாமரை மொட்டு. 
  • இப்படி முகத்தை விரித்துக் காட்டுவது தெய்வத் தாமரை (முலை - தெய்வத் தாமரை)

உவமை வகைகள்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment