முன்பு இல்லாத ஒன்றை
உவமையாக்கிச் சொல்வது
அபூத உவமை
பூதம் - பூதம் அல்லாதது - அபூதம்
எல்லாக் கமலத்து எழிலும் திரண்டு ஒன்றின்
வில் ஏர் புருவத்து வேல் நெடுங்கண் - நல்லீர்
முகம் போலும் என்ன முறுவலித்தார் வாழும்
அகம் போலும் எங்கள் அகம்
- நல்லீர்
- எல்லாத் தாமரை மலர்களின் எழிலும் ஒன்று திரண்டு இருப்பது போல் உன் முகம் இருக்கிறது
- அதில் வில் போன்ற புருவம் இருக்கிறது
- வேல் போன்று நீண்ட கண் இருக்கிறது
- அந்த முகம் சிரிக்கிறது
- எங்கள் அகம் போலச் சிரிக்கிறது
- என்கிறேன்.
தண்டியலங்காரம் PDF பக்கம் 74
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment