Pages

Saturday, 24 May 2025

தண்டியலங்காரம் - விலக்கு உவமை

இரண்டு பொருள்களுக்கு உள்ள ஒப்புமையைக் கூறி 
ஒன்றை விலக்கி 
மற்றொன்றை மேம்படுத்திக் காட்டுவது 
விலக்கு உவமை 

குழை பொருது நீண்டு குமிழ் மேல் மறியா 
உழை பொருது என் உள்ளம் கவரா - மழை போல்
தரு நெடுங்கைச் சென்னி தமிழ்நாடு அனையார்
கரு நெடுங்கண் போலும் கயல்

மழை போல் கொடை தரும் நெடுங்கை உடையவன் சென்னி
அவன் நாடு சோழநாடு
அவள் சோழநாடு போன்றவள் 
அவளுக்குக் கருமையான நீண்ட கண்
அவள் கண் போல் கயல்மீன் இருக்கிறது

அவள் கண்

காதிலுள்ள குழையோடு போரிடுவது போல் நீண்டுள்ளது
குமிழம்பூ போன்ற மூக்குக்கு மேலே இருக்கிறது
திரும்பி நாலாப் பக்கமும் பார்க்கிறது
மானைப் போல் பார்க்கிறது 
என் உள்ளத்தைக் கவர்கிறது

கயல்

பிறழ்வதில் மட்டும் இவள் கண் போல் இருக்கிறது
பிறவற்றில் இவள் கண்ணுக்கு ஒப்பாக இல்லை

தமிழ்வளப் பாடல்கள் -- பாடலில் அணிகள் - அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment