Pages

Saturday, 24 May 2025

தண்டியலங்காரம் - தற்குறிப்பேற்ற உவமை

மாறன் கை போல்
கார்மேகம் கொடை வழங்குகிறது
என்று புலவன்
தன் கருத்தை ஏற்றிச் சொல்கிறான்

உண்ணீர்மை தாங்கி உயர்ந்த நெறி ஒழுகி
வெண்ணீர்மை நீக்கி விளங்குமால் - தண்ணீர்த்
தரம் போலும் என்னத் தரு கடம்பை மாறன்
கரம் போல் கொடை பொழி வான் கார்
  • மாறன் உள்ளத்தில் நீர்மை உடைவன். உயர்ந்த நெறியில் ஒழுகுபவன். வெள்ளைத்தனம் இல்லாதவன். 
  • கார்மேகம் உள்ளே நீரைத் தாங்கிச் செல்கிறது. உயர்ந்து செல்கிறது. நெறிந்து செல்கிறது. வெள்ளை நிறம் மாறிக் கருமை நிறம் கொண்டிருக்கிறது
  • கடம்பையூர் மாறன் கை கொடை வழங்குவது போல் வானில் திரியும் மேகம் மழை பொழிகிறது  
தமிழ்வளப் பாடல்கள் -- பாடலில் அணிகள் - அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு 

No comments:

Post a Comment