விண்ணுலக மண்ணுலக அரசர்களை
ஒப்புமைப்படுத்தும் இப்பாடல்
ஒப்புமைக் கூட்ட உவமை அணி
விண்ணின் மேல் காவல் புரிந்து உறங்கான் விண்ணவர் கோன்
மண்ணின் மேல் அன்னை வய வேந்தே - தண் அளியில்
சேரா அவுணர் குலங்களையும் தேவர் கோன்
நேரார் மேல் அத்தகையை நீ
- விண்ணவர் கோன் இந்திரன் விண்ணைக் காக்கிறான்
- அதுபோல வய வேந்தே! நீ அன்னை போல் மண்ணுலகைக் காக்கிறாய்
- இந்திரன் அவுணர் குலங்களை அழிக்கிறான்
- அதுபோல நீ பகைவர்களை அழிக்கிறாய்
தண்டியலங்காரம் PDF பக்கம் 81
தமிழ்வளப் பாடல்கள் -- பாடலில் அணிகள் - அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment