எழுத்திலும், சொல்லிலும் - வன்மை, இடைமை, மென்மை - விரவி வரப் பாடுவது சமநிலை என்னும் செய்யுள்நெறி. இந்த விருத்தப்பாடலில் அந்தச் சமநிலைப் பாங்கினைக் காணலாம்
சோகம் எவன்கொல் இதழி பொன் தூக்கின சோர் குழலாய்
மேகம் முழங்க விரை சூழ் தளவம் கொடி எடுப்ப
மாகம் நெருங்க வண்டானம் களி வண்டு பாட எங்கும்
தோகை நடம் செய்யும் அன்பர் திண் தேர் இனித் தோன்றியதே
- தோழி தலைவியைத் தேற்றுகிறாள்
- பூ தொங்கும் கூந்தலை உடையவளே
- சோகம் ஏன்?
- கொன்றை பூக்கிறது
- மேகம் முழங்குகிறது
- பூக்கும் தளவம் பூ மணக்கிறது
- வானத்தில் வண்டுகள் பாடுகின்றன
- மயில் ஆடுகிறது
- இது கார்காலம் அல்லவா
- அவர் தேர் வரும்
தண்டியலங்காரம் PDF பக்கம் 42
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment