Pages

Friday, 23 May 2025

அதிசய உவமையுடன் சிலேடை

இது என்ன அதிசயம்

நின்னுழையே நின் முகமும் காண்டும் நெடுந்தடம்
தன்னுழையே தன்னையும் காண்குவம் - என்னும் 
இது ஒன்றுமே அன்றி வேற்றுமை உண்டோ
மது ஒன்று செந்தாமரைக்கு
  • உன்னிடத்தில் உன்னைப் பார்க்கிறேன்
  • குளத்தில் தாமரையிடத்தில் தாமரையைப் பார்க்கிறேன். அதில் உன் முகத்தையும் பார்க்கிறேன்
  • இதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை
  • மது இருக்கும் செந்தாமரைக்கும் உன் முகத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை
பாலினிடம் நீல மணி நிறம் சேர் பான்மை போல்
ஞாலம் பரந்த நகை நிலவும் - மா இருளாம் 
வையம் மருவும் மூவிலை வேல் வன்கண் தமருகக் கைச்
செம்மல் கரு மாமை சேர்ந்து
  • மூவிலை வேலும் தமருகமும் வைத்திருக்கும் சிவன் வேலின் ஒளி பட்டு உமையின் மாமை நிறமும் மாறி அவன் உடம்பெல்லாம் வெண்மையாகத் தெரியும்
  • பாலின் பக்கத்தில்  வைத்த நீல மணி, பாலை இருள் நிறம் கொள்ளும்படிச் செய்யும்
  • அது போல் உன் சிரிப்பால் உன் நிறமெல்லாம்  வெள்ளையாகத் தெரிகிறது 
தண்டியலங்காரம் PDF பக்கம் 79 
தமிழ்வளப் பாடல்கள்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment