சிலேடை அணி வரப் பாடப்பட்ட உவமை அணி
செந்திருவும் திங்களும் பூவும் தலை சிறப்பச்
சந்தத் தொடையோடு அணி தழுவிச் - செந்தமிழ் நூல்
கற்றார் புனையும் கவி போல் மனம் கவரும்
முற்றா முலையாள் முகம்
- இது செம்மொழிச் சிலேடை
- செந்தமிழ் நூல் கற்றார் புனையும் கவி
- மனம் கவரும் முற்றா முலையாள் முகம்
- இரண்டுக்கும் சிலேடை
- நூலில் கவியானது
- திரு, திங்கள், பூ என்னும் மங்கலச் சொற்களில் தொடங்கும்
- சந்தத் தொடையோடு அணி தழுவிப் பாப்படும்
- முலையாள்
- திருமகள் போன்றவள்
- திங்கள் போல் முகம் கொண்டவள்
- தலையில் பூ சூடியவள்
நளி தடத்த வல்லியின் கண் நெகிழ ஞாலத்து
அளவு இல் நிறை கடாம் சிந்திக் - களிறு இகலும்
கந்த மலையா நிலவும் கவடு அசைய
வந்த மலையா நிலம்
- இது பிரிமொழிச் சிலேடை
- யானை
- தென்றல்
- இரண்டுக்கும் சிலேடை
யானை
- அகன்ற நிலத்தில் விலங்குகளின் பார்வை நெகிழுமாறு நிலத்தில் அளவு இல்லாமல் நிறைந்த மதம் பொழிந்துகொண்டு யானை நடக்கும்
- மணி கட்டிய கயிறு அசையும்படி நடக்கும்
- அகன்ற நிலப்பரப்பில் கொடிகள் நுனி ஆடுமாறு பூக்களின் தேன் நிலப்பரப்பில் சிந்துமாறு வீசும்
- மணம் வீசும்படி வீசும்
தண்டியலங்காரம் PDF பக்கம் 78
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment