இதற்கு இதுதான் உவமை என்று வரையறுக்குக் கூறுவது நியம உவமை
தாது ஒன்று தாமரையே நின் முகம் ஒப்பது மற்று
யாது என்றும் ஒவ்வாது இளங்கொடியே - மீது உயர்ந்த
சேலே பணியப் புலி உயர்த்த செம்பியர் கோன்
வேலே விழிக்கு நிகர்
- இளங்கொடியே
- தாமரை உன் முகம் போல் இருக்கிறது. வேறு எதுவும் உன் முகம் போல் இல்லை.
- மீன் கொடி பணிய, புலிக்கொடி உயர்த்திய செம்பியன் கையிலிருக்கும் குருதி படிந்த வேல் உன் கண் போல் இருக்கிறது. வேறு எதுவும் உன் கண் போல் இல்லை.
தண்டியலங்காரம் PDF பக்கம் 69
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment