ஒரு பொருளுக்கு ஒரு உவமையைச் சொல்லி அது போல்வது இருந்தாலும் உவமையாக ஏற்றுக்கொள்ளலாம் எனல் அநியம உவமை
கௌவை விரி திரை நீர்க் காவிரி சூழ் நன்னாட்டு
மௌவல் கமழும் குழல் மடவாய் - செவ்வி
மது வார் கவிரே நின் வாய் போல்வது அன்றி
அது போல்வது உண்டு எனினும் ஆம்
- பாடும் நீரலை சூழ்ந்தது காவிரி நாடு
- மௌவல் (மரமல்லி) மணக்கும் கூந்தலை உடையவளே
- தேன் ஒழுகும் முருக்க மலர் உன் வாய் போல் இருக்கிறது.
- வேறு ஏதாவது அது போல் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம்.
தண்டியலங்காரம் PDF பக்கம் 69
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
![]() |
| கவிர் என்னும் முருக்கம் பூ |
.jpg)
No comments:
Post a Comment