நிந்தை உவமை என்பது உவமையைப் பழித்து உவமிப்பது
மறுப் பயின்ற வான்மதியும் அம் மதிக்குத் தோற்கும்
நிறத்து அலரும் நேர் ஒக்குமேனும் - சிறப்பு உடைத்துத்
தில்லைப் பெருமான் அருள் போல் திருமேனி
முல்லைப் பூங்கோதை முகம்
- வானத்தில் இருக்கும் மதியத்தில் களங்கம் உண்டு
- அந்த மதியத்தைப் பார்த்ததும் தாமரை சுருங்கிவிடும்
- இவள் கூந்தலில் முல்லை அணிந்தவள்
- தில்லைப் பெருமான் அருள் போல் இன்பம் தரும் மேனி கொண்டவள்
- இவள் முகம் மதியம் போன்றது என்றால், இவள் முகத்தில் மதியில் இருப்பது போல் களங்கம் இல்லையே
- இவள் முகம் தாமரை போன்றது என்றால் இவள் முகம் இரவில் சுருங்குவதில்லையே
தண்டியலங்காரம் PDF பக்கம் 69
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment