வல்லின எழுத்து இல்லாமல் பாடுவது நெகிசை.
தொல்காப்பியம் குறிப்பிடும் வண்ணம் இங்கு ஒப்புநோக்கத் தக்கது
விரவலராய் வாழ்வாரை வெல்வாம் ஒழிவாம்
இரவுலவா வேலை ஒலியே - வரவொழிவாய்
ஆயர் வாயே அரிவை ஆருயிரை ஈராவோ
ஆயர் வாய் வேயோ அழல்
இந்த வெண்பாவில் வல்லின எழுத்து இல்லை. எனவே இது நெகிசை. இவ்வாறு பாடுவது கௌட நெறி என்று தண்டியலங்காரம் கூறுக்கிறது.
- காதலரைப் பிரிந்திருப்பவரை வருத்தும் கடல் ஒலியே
- இரவிலும் ஓயாத கடல் ஒலியே
- நீ அலையில் வந்து ஒலிப்பதை நிறுத்திக்கொள்
- ஆயர் வாயில் வரும் புல்லாங்குழலின் ஒலி இவள் உயிரை அறுப்பது போதாதா
- ஆயர் வாய் புல்லாங்குழலே இவளை எரிக்கும் தீ.
தண்டியலங்காரம் PDF பக்கம் 40
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment