Pages

Monday, 19 May 2025

செய்யுளில் செறிவு

நெகிழிசை இல்லாமல் பாடப்படுவது செறிவுச் செய்யுள். 

சிலை விளங்கு நீள் புருவம் சென்று ஒசிய நோக்கி
முலை விலங்கிற்று என்று முனிவாள் - மலை விலங்கு
தார் மாலை மார்ப தனிமை பொறுக்குமோ
கார் மாலை வந்துற்ற போது

  • தார்மாலை மார்ப! நீ இவளை அணத்துக்கொண்டு இருக்கும்போது சற்றே தளர்ந்து உன் மார்பு அவள் முலையிலிருந்து விலகியதற்கே சினம் கொண்டு ஊடுபவள் நீ பிரிந்திருக்கும்போது கார்காலமும் மாலைக்காலமும் வந்தால் தனிமையைப் பொறுத்துக்கொள்வாளா

நெகிழிசை என்பது வல்லின எழுத்து வராமல் பாடுவது. இந்தப் பாடலில் மூவின எழுத்துகளும் உள்ளன. இப்படிப் பாடுவது வைதருப்ப நெறி. கௌட நெறியில் ஒழுகிசைப் பாடல்களும் வரும்.  

மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment