Pages

Wednesday, 21 May 2025

விரிவுவமை

உவமை உருபு விரிந்து வருவது விரி உவமை

பால் போலும் இன்சொல் பவளம் போல் செந்துவர் வாய் 
சேல் போல் பிறழும் திரு நெடுங்கண் - மேலாம் 
புயல் போல் கொடைக் கை புனல் நாடன் கொல்லி 
அயல் போலும் வாழ்வது அவர்

  • பால் போல் இனிக்கும் சொல்
  • பவளம் போல் சிவந்திருக்கும் வாய்
  • சேல் மீன் போலப் பிறழும் நீண்ட அழகிய கண்கள்
  • கொண்ட அவள்
  • மழைமேகம் போலக் கொடுக்கும் கையை உடைய புனல் நாடன் கொல்லிமலைப் பக்ககம் வாழ்பவள் போலும்

மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment