Pages

Friday, 28 March 2025

மறம் என்றால் என்ன Bravery

அறம் என்றால் என்ன?

நல்லவை செய்தல் அறம். Actions agreed

நல்லவை எது?

தனக்கும் பிறருக்கும் நன்மை பயப்பவை. 


மறம் என்றால் என்றால் என்ன?

அறம் அல்லாதவை மறம் என நினைப்பது தவறு. 

மறம் என்பது தகாத செயல் அன்று. செய்யத்தக்க செயல். 

நாட்டைக் காக்கப் போரிடுவது மறம். 

அரசன் தன் ஆசைக்காக மறவன் மகளை மணந்துகொள்ளக் கேட்கும்போது, தர  மறுத்து, மறவன் பேசுவது மறம். 

கண்ணப்பன் இறைவனுக்காகத் தன் கண்ணைத் தோண்டித் தந்தது திருமறம்.


வீரம் என்பது ஆண்மகன் ஒருவனின் உணர்வு வெளிப்பாடு. இதனை, "பெருமிதம்" என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிஇறது. 

பெருமித உணர்வின் செயல் வெளிப்பாடே மறம். 

இதனை வீரதீரச் செயல் எனலாம்.

மறச்செயல் புரிபவன் மறவன். 

மறச்செயல் செய்யும் குடும்பம் மறக்குடி. 


No comments:

Post a Comment