Pages

Friday, 28 March 2025

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை 4

வெண்பா

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.  1  
  • தொழுதால் 
  • ஆனைமுகன்
  • நலம் உண்டாக்கும்
  • செய்யும் தொழிலை நிறைவேற்றும்
  • நம் வாயில் நல்ல சொற்களே வரும் 
  • நமக்குப் பெருமிதம் தரும்
கட்டளைக் கலித்துறை

கைக்கும் பிணியொடு காலன் தலைப்படும் ஏல்வையினில்
எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் தேன்வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த பாய்மத யானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே.  2  
  • நோயில் காலன் வரும் வேளையில் கவலையில் கிடந்து வெம்பினேன்.
  • அப்போது ஆனைமுகனைப் பணிந்தேன்.
  • அவன் பாம்பை இடுப்பில் கட்டியிருப்பவன் மகன். 
  • ஆனைமுகன்
  • 10 திக்கும் பணியும் நுதல் கொண்டவன். 
  • அவன் என்னைக் காப்பான்.  
வெண்பா

அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடியவலோ டெள்ளுண்டை கன்னல் - வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்.  3  
  • அவன் அடியவர் உள்ளத்தில் வாழ்பவன்
  • அப்பம், அவல், எள்ளுருண்டை, கரும்பு சுவைக்கு ஆட்படுபடுவன்.
  • இவற்றை  அவனுக்குப் படைத்துத் தொழு
  • வாழ்த்து  
கட்டளைக் கலித்துறை

வாழைக் கனிபல வின்கனி மாங்கனி தாஞ்சிறந்த
கூழைச் சுருள்குழை அப்பம்எள் ளுண்டைஎல் லாந்துறுத்தும்
பேழைப் பெருவயிற் றோடும் புகுந்தென் உளம்பிரியான்
வேழத் திருமுகத் துச்செக்கர் மேனி விநாயகனே.  4  
  • வாழை, பலா, மா, அப்பம், எள்ளுருண்டை தின்னும் பேழைப் பெருவயிற்றன். 
  • அவன் வேழ முகன் 
  • என் உள்ளம் புகுந்தான்
  • செக்கர்  மேனியன்
கபிலதேவ நாயனார் அருளிய மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை (மூத்த நாயனார் என்பவர் விநாயகர். இதில் உள்ளவை விநாயகரைப் போற்றும் பாடல்) - 11 ஆம் திருமுறை - 10 ஆம் நூற்றாண்டு நூல். 

வேழ முகன்


No comments:

Post a Comment