Pages

Friday, 28 March 2025

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை 8

வெண்பா

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.  5  
  • வெவ்வினையை வேரறுக்க வல்லவன்
  • நம் வேட்கையைத் தணிவிப்பவன்
  • விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதன்
கட்டளைக் கலித்துறை

கனிய நினைவொடு நாடொறும் காதற் படும் அடியார்க்
கினியன் இனியொரு இன்னாங் கிலம்எவ ரும்வணங்கும்
பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை
முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே.  6  
  • அடியார்க்கு இனியன் 
  • அவனைப் போற்றும் எனக்கு இன்னாங்கு (துன்பம்) இல்லை
  • கொன்றைச்சடை முனிவன் சிறுவன் 
  • அவன் கொல்யானை
வெண்பா

யானை முகத்தான் பொருவிடையான் சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் - மேல்நிகழும்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்.  7  
  • யானை முகத்தன்
  • விடையான் சேய்
  • மணிவண்ணன் மருகன் 
கட்டளைக் கலித்துறை

உளதள வில்லதோர் காதலென் நெஞ்சில்வன் நஞ்சமுண்ட
வளரிள மாமணி கண்டன்வண் டாடுவண் கோதைபங்கத்
திளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன் கைம்முகத்துக்
களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே.  8  

  • நஞ்சமுண்ட மணிகண்டன் மகன்
  • கை முகத்துக் களியானை 

  • கபிலதேவ நாயனார் அருளிய மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை (மூத்த நாயனார் என்பவர் விநாயகர். இதில் உள்ளவை விநாயகரைப் போற்றும் பாடல்) - 11 ஆம் திருமுறை - 10 ஆம் நூற்றாண்டு நூல்.

    கை முகத்துக் களியானை


    No comments:

    Post a Comment