போக்கு வரவு அற்ற புண்ணிய காரணன்
நோக்கரிய நுண்ணியன் நுண்ணியன்
தேக்கு மலத்தன் சிவனுக்கு உரியவன்
பாக்கில் வியாபி பல அணுத் தானே 3088
- அவன் பல அணுவாக உள்ளான்
கரடிகள் ஐந்தும் கடுங்கானம் வாழ்வன
திருடி இராப்பகல் தின்று திரிவன
கரடிகள் ஐந்தும் கடைத்தலைப் பட்டால்
குருடியர் குத்தினும் குண்டு உறலாமே 3089
- 5 புலனும் 5 கரடிகள்
உச்சிக்கு மேலே உணர்வுக்கும் கீழே
வச்ச பொருளின் வகை அறிவார் இல்லை
வச்ச பொருளின் வகை அறிவாளர்க்கு
எச்ச எருதும் இள எருது ஆமே 3090
- அவன் உச்சிக்கு மேல், உணர்வுக்குக் கீழ் இருக்கிறான்
உரைநூல்களில் காணப்பட்ட பாடல்கள்
திருப்பனந்தாள், காசி மடம் பதிப்பு, 2003
No comments:
Post a Comment