Pages

Sunday, 19 December 2021

திருமந்திரம் தொகுப்புப் பாடல்கள் Tirumanthiram Collections 3094

வாசலின் கீழே படுகுழி மூன்று உள
ஊசி இருக்கும் பழஞ்சோற்று இருங்குழி
ஊசி இருக்கும் பழஞ்சோற்றை நாய் தின்ன
வாசல் இருந்தவர் வாய் திறவாரே     3091
  • ஊசிய உடலை நாய் தின்ன மற்றவர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்
முத்துப் பவளம் பச்சை என்று இம் மூன்றும் 
ஒத்துப் புணரும் உணர்வை அறியார்
ஒத்துப் புணரும் உணர்வை அறிந்த பின்
கொத்துப் படும் கொக்கு போல் குருவாயே    3092
  • மனம் வாக்கு செயல் மூன்றும் ஒத்துப்போவதில்லை
பண் நாதப் பேரொளிக்கு அப்புறத்து அப்புறம் 
எண் நாயகனார் இருந்து அங்கு இருந்திடம்
உன்னா வெளியது உரை செயா மந்திரம்
சொன்னான் கழல் முன் அறிந்து அமர்ந்தோமே     3093
  • உரைசெயா மந்திரம்
ஆரை பழுத்துக் கிடக்குது வையகம்
ஆரையைச் சூழ நீர் கோத்து நிற்குது
ஆரை பறித்துக் கறி உண்ண மாட்டாமல்
கீரைக்கு நெல் இட்டுக் கெடுக்கின்ற வாறே    3094
  • ஆரைக் கீரையை (பொன்னாங்கண்ணிக் கீரையை)ப் பறித்து நெல்லஞ்சோற்றோடு உண்ண வேண்டும்.
உரைநூல்களில் காணப்பட்ட பாடல்கள் 
திருப்பனந்தாள், காசி மடம் பதிப்பு, 2003  

No comments:

Post a Comment