உருகிப் புறப்பட்டு உலகை வலம் வந்து
செருகிக் கிடக்கும் துறை அறிவார் இல்லை
செருகிக் கிடக்கும் துறை அறிவாளர்க்கு
உருகிக் கிடக்கும் என் உள்ளன்பு தானே 3083
- அவன் நாம் நீராட நமக்குள் செருகிக் கிடக்கும் துறை
எட்டினில் எட்டும் அதில் ஒட்டிரட்டியும்
கட்டியை விட்டுக் கலந்து உண்ண மாட்டாமல்
பட்டினி விட்டும் பலவிதம் தேடியும்
எட்டும் இரண்டும் அறியாத மாக்களே 3084
- பட்டினி விரதம் முதலானவற்றால் அவனைத் தேடிப் பயன் இல்லை
கோயிலும் அஞ்சு உள கோபுரம் மூன்று உள
கோயில் அடைக்கக் கதவோ இரண்டு உள
கோயில் திறந்து கும்பிட வல்லார்க்கு
கோயிலுக்கு உள்ளே குடியிருந்தானே 3085
- அவன் உடல், உள்ளம் என்னும் 2 கோயிலுக்குள் குடியிருக்கிறான்
நாதன் இருக்கும் நடு மண்டபத்துள்ளே
நாதாங்கி இல்லாமல் நாலஞ்சு வாசல்
ஆதாரம் ஏது என்று அறிய வல்லார்க்கு
வேதாவின் ஓலை வீண் ஓலை ஆமே 3086
- நடு மண்டபத்துக்குக் கதவு இல்லாமல் 4, 5 வாசல்.
அநாதி சொரூபி ஆகிய ஆன்மா
தனாதி மலத்தால் தடைப்பட்டு நின்றன
தனாதி மலமும் தடை அற நீங்கிடில்
அநாதி சிவத்துடன் ஒன்றான வாறே 3087
- ஆன்மா மலத்தால் தடைபட்டுக் கிடக்கிறது
உரைநூல்களில் காணப்பட்ட பாடல்கள்
திருப்பனந்தாள், காசி மடம் பதிப்பு, 2003
No comments:
Post a Comment