சொன்னம் குகை மூன்று தான் பச்சிலை
மின்ன அரைத்து வை வெள்ளி பொன் ஆயிடும்
வன்னம் பதி இந்த வாசி கொண்டு ஊதிடில்
சொன்னம் வாஞ்சித்து ஒன்றும் என் சிந்தையே 3078
- தங்கக் குகையில் பச்சிலை மூன்றை (காமம், வெகுளி, மயக்கம்) அரைத்து வை. வெள்ளி பொன்னாக மாறும்.
இருவர் இருந்திடம் எண்டிசை அண்டம்
அரி பிரமாதிகள் ஆரும் அறிந்திலர்
பரிதியும் சோமனும் பாரும் உம்மிடத்தே
கருதி முடிந்து இடம் சொல்ல ஒண்ணாதே 3079
- ஞாயிறு, திங்களை உனக்குள்ளே பார்
கோத்த கோவை குலையக் குருபரன்
சேத்த சேவடி சென்னியில் வைத்து ஒரு
வார்த்தை சொல்லி வழக்கு அறுத்து ஆண்டவன்
பார்த்த பார்வை பசுமரத்து ஆணியே 3080
- குருபரன் பார்வை பசுமரத்து ஆணி போல் பதிகிறது
வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இரண்டும்
போதாந்தம் ஆன புரந்தரன் வாழ்வு ஒன்று
நாதாந்தமான ஞானம் கை கூடாதேல்
சேதாந்தமான செனனம் ஒழியாதே 3081
- அவன் அறிவு. அது கைகூடாவிட்டால் பிறப்பு ஒழியாது
ஆதாரம் ஆறு அல்ல அப்பால் நடம் அல்ல
ஓதா ஒளி அல்ல உன் மந்திரம் அல்ல
வேதாகமத்தில் விளங்கும் பொருள் அல்ல
சூதான நந்தி சொல் உபதேசமே 3082
- சிவன் சொல்லே மந்திரம்
உரைநூல்களில் காணப்பட்ட பாடல்கள்
திருப்பனந்தாள், காசி மடம் பதிப்பு, 2003
No comments:
Post a Comment