Pages

Saturday, 18 June 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 91-100

10 இனியவை கூறல்

நெஞ்சீரம் ஊறிவரின் நெருடிவரும் இன்சொற்கள் \91\
வஞ்சனை இல் லாக்கொடையின் மாட்சித்தாம் இன்சொற்கள் \92\
கொஞ்சுமுகம் மன இன்சொல் கூடுவதே அறநெறியாம் \93\
பஞ்சாகப் பசிபறக்கும் \94\ பணிவுடைமை அதற்கணியாம் \95\

நல்லனவே இன்சொல்லாம் நாடுவதால் அறம்பெருகும் \96\
சொல்லுவதால் நயன்நன்றி தோய்ந்துவரும் பண்புச்சொல் \97\
பல்லின்பம் எப்போதும் படுத்தாத இன்சொல்லால் \98\
சொல்லுவரோ வன்சொற்கள் \99\ சுவைகாண்போம் கனிச்சொல்லில் \100\
 
அணிகலன் மேனி அழகு
இனியவை கூறல் இதைவிடச் சிறந்த அணிகலன்

இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

இனியவைகூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் \ செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து \ இன்சொலன் ஆகப் பெறின். 92
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் \ இன்சொ லினதே அறம். 93
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் \ இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. 94
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு \ அணியல்ல மற்றுப் பிற. 95
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை \ நாடி இனிய சொலின் 96
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று  \ பண்பின் தலைப்பிரியாச் சொல்.97
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் \ இம்மையும் இன்பம் தரும். 98
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ \ வன்சொல் வழங்கு வது. 99
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் \ காய் கவர்ந் தற்று. 100

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment