Pages

Saturday, 18 June 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 101-110

தினையரிசி, பனைமரம்
செய்ந்நன்றி அறிதல்

உதவாமல் உதவியவர் உலகம் வான் கொடையின் மேல் \101\
உதவி எனல் காலத்தால் உதவுவதே \102\ பயன்தூக்கின்
மதவலியின் கடலைவிட மாப்பெரிது \103\ தினையளவு
உதவிடினும் பனையளவாம் உள்ளபடி பயன்கண்டால் \104\

செய்த அள(வு) அன்(று) உதவி செயப்பட்டார் சால்பளவு \105\
எய்தியநோய் போக்கியவர் எண்ணத்தில் கொளற்பாலார் \106\
உய்தியதாம் எப்போதும் \107\ உளங்கொள்க மறவாதே \108\
செய்ந்நன்றி எண்ணிப்பார் \109\ செய்யாமல் உய்வில்லை. \110\

இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006
திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

செய்ந்நன்றி அறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் \ வானகமும் ஆற்றல் அரிது. 101
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் \ ஞாலத்தின் மாணப் பெரிது. 102
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் \ நன்மை கடலின் பெரிது. 103
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் \ கொள்வர் பயன்தெரி வார். 104
உதவி வரைத்தன்று உதவி உதவி \ செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க \ துன்பத்துள் துப்பாயார் நட்பு. 106
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் \ விழுமந் துடைத்தவர் நட்பு. 107
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது \ அன்றே மறப்பது நன்று. 108
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த \ ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை \ செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 110

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment