நடுவு நிலைமை
பகைநட்பை எண்ணாமல் பாங்கொழுகல் நடுவுநிலைமை
111
தகுதியுடை அவ்வாக்கம் தன்வழியைக் காப்பாற்றும்
112
விகுதிநடு வில்லாக்கம் விட்டொழிக (113) தக்கார்சொல்
பகுதிதரு எச்சத்தால் பளிச்சென்று தெரியவரும்
114
ஆக்கமது வரும்போகும் அகம்கோடார் சான்றவர்கள்
115
போக்காகும் நடுவுகெடின் (116) பொறித்தாழ்வு
கேடின்றால் 117
நோக்கமெலாம் சீர்தூக்கல் 118 நுவன்றிடுவார்
செப்பமென 119
ஆக்கங்காண் வாணிகர்க்கே அவர்ப்போலப் பிறர்ச்செய்யின்
120
இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006
திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்
நடுவு நிலைமை
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் \ பாற்பட்டு
ஒழுகப் பெறின். 111
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி \ எச்சத்திற்
கேமாப்பு உடைத்து. 112
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை \ அன்றே
யொழிய விடல். 113
தக்கார் தகவிலர் என்பது அவரவர் \ எச்சத்தாற்
காணப்ப படும். 114
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
\ கோடாமை சான்றோர்க் கணி. 115
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் \ நடுவொரீஇ
அல்ல செயின். 116
கெடுவாக வையாது உலகம் நடுவாக \ நன்றிக்கண்
தங்கியான் தாழ்வு. 117
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
\ கோடாமை சான்றோர்க் கணி. 118
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா \ உட்கோட்டம்
இன்மை பெறின். 119
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் \ பிறவும்
தமபோல் செயின். 120
திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்
No comments:
Post a Comment