அடக்கம் உடைமை
அடக்கமது அமரருளும் அடங்காமை இருளுள்ளும்
மடக்கிவிடும் 121 அடக்கத்தை மதித்திடுக உயிராக
122
நடுக்கில்லா அடக்கத்தால் நாடிவரும் சீர்மைநிலை
123
அடக்கமது மலையைவிட அளவில்லாப் பெருமையதாம்
124
பணிவுடைமை செல்வர்க்கே பகட்டுதரும் 125 ஆமைபோல்
மணிப்பொறிகள் அடக்கிடுக 126 வாய்காக்க
127 தீச்சொல்லைக்
கணித்தெறிக 128 தீச்சொல்லின் காயவடு ஆறாதால்
129
தணியுமேல் சினவுணர்வு சார்ந்துவரும் அறத்தெய்வம்
130
இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006
திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்
அடக்கமுடைமை
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை \ ஆரிருள்
உய்த்து விடும். 121
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் \ அதனினூஉங்
கில்லை உயிர்க்கு. 122
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
\ ஆற்றின் அடங்கப் பெறின். 123
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் \
மலையினும் மாணப் பெரிது. 124
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
\ செல்வர்க்கே செல்வம் தகைத்து. 125
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் \
எழுமையும் ஏமாப் புடைத்து. 126
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் \ சோகாப்பர்
சொல்லிழுக்குப் பட்டு. 127
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
\ நன்றாகா தாகி விடும். 128
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே \ நாவினாற்
சுட்ட வடு. 129
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
\ அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130
திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்
No comments:
Post a Comment