9 விருந்தோம்பல்
விருந்தோம்ப வாழ்கின்றோம் \81\ விருந்தின்றேல் மருந்துணவு \82\
வருவிருந்தை ஓம்புவதால் வாழ்க்கையது பாழ்போமோ \83\
திருவந்து குடியிருக்கும் \84\ செய்யுழவு நல்விளைவாம் \85\
மருவிவரும் வானுலகம் வாழ்க்கையெலாம் இன்பமயம் \86\
விருந்தோம்பும் வேள்வியினால் வேண்டுகின்ற பயன்கிட்டும் \87\
பரிந்தோம்பிப் பற்றறுதல் பாவனைபோல் ஆகிவிடும் \88\
விருந்தோம்பாப் பெருஞ்செல்வம் வீணாக்கும் மடமையினார் \89\
விருந்துள்ளம் வெந்துமுகம் வீசுவதால் நொந்திடுமே. \90\
இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006
திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்
விருந்தோம்பல்
இருந்தோம்பி
இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி \ வேளாண்மை செய்தற் பொருட்டு. 81
விருந்து
புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் \ வேண்டாற்பாற் றன்று. 82
வருவிருந்து
வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து \ பாழ்படுதல் இன்று. 83
அகனமர்ந்து
செய்யாள் உறையும் முகனமர்ந்து \ நல்விருந்து ஓம்புவான் இல். 84
வித்தும்
இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி \ மிச்சில் மிசைவான் புலம். 85
செல்விருந்து
ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் \ நல்வருந்து வானத் தவர்க்கு. 86
இனைத்துணைத்
தென்பதொன் றில்லை விருந்தின் \ துணைத்துணை வேள்விப் பயன். 87
பரிந்தோம்பிப்
பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி \ வேள்வி தலைப்படா தார். 88
உடைமையுள்
இன்மை விருந்தோம்பல் ஓம்பா \ மடமை மடவார்கண் உண்டு. 89
மோப்பக்
குழையும் அனிச்சம் முகந்திரிந்து \ நோக்கக் குநழ்யும் விருந்து. 90
திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்
No comments:
Post a Comment