Pages

Friday, 17 June 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 71-80

8 அன்புடைமை
அன்பிற்குத் தாழ் இல்லை அன்புடையார் கண்பேசும் \71\
அன்பில்லார் தமக்குதவும் அன்புடையார் பிறர்க்குதவும் \72\
என்புயிர்போல் அன்பியையும் \73\ ஈன் ஆர்வம் நட்புதரும் \74\
இன்புறுதல் அன்பால்தான் எச்சிறப்பும் அதன்விளைவே. \75\

அன்பேதான் அறியாதார் ஆணவம்போ கத்துணையாம் \76\
என்பிலுயிர் வெயில்காயும் இதயமிலார் காய்ந்தெரிவர் \77\
அன்பில்லார் தழைவதிலை \78\ அவருடலால் என்னபயன் \79\
அன்பால்தான் உயிர்வாழும் அன்பின்றேல் உடல்சட்டை. \80\



இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

அன்புடைமை
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் \ புன்கணீர் பூசல் தரும். 71
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் \ என்பும் உரியர் பிறர்க்கு. 71
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு \ என்போடு இயைந்த தொடர்பு. 73
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் \ நண்பென்னும் நாடாச் சிறப்பு. 74
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து \ இன்புற்றார் எய்தும் சிறப்பு. 75
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் \ மறத்திற்கும் அஃதே துணை. 76
என்பி லதனை வெயில்போலக் காயுமே \ அன்பி லதனை அறம். 77
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் \ வற்றல் மரந்தளிர்த் தற்று. 78
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை \ அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 79
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு \ என்புதோல் போர்த்த உடம்பு. 80

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment