Pages

Friday, 17 June 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 61-70


மக்கட் பேறு
குழந்தைச் செல்வம்

தம்மக்கள் ஆம்செல்வம் தன்பேறாக் கொளல்முறையாம் \61\
எம்மையிலும் தீங்குவரா எப்பழியும் சாராவே \62\
இம்மாட்சி தன்வினையாம் \63\ இனிதவர்கை அளவியகூழ் \64\
தம்மக்கள் சொல்லின்பம் தவழும்மெய் பேரின்பம் \65\

மழலைமொழி வாய்ச்சொல்முன் மகிழிசையோ குழல்யாழ்கள் \66\
அழகுகடன் தந்தைகோள் அவர்மகனை முந்தேற்றல் \67\
தழையறிவு தனைவென்றால் தாரணிக்கே இனிதாகும் \68\
உழைதாயும் உவந்திடுவாள் \69\ ஊர்மெச்சின் மகன்பேறாம் \70\


இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

புதல்வரைப் பெறுதல்

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த \ மக்கட்பேறு அல்ல பிற. 61
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் \ பண்புடை மக்கட் பெறின். 62
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் \ தம்தம் வினையான் வரும். 63
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் \ சிறுகை அளாவிய கூழ். 64
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் \ சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் \ மழலைச்சொல் கேளா தவர். 66
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து \ முந்தி இருப்பச் செயல். 67
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து \ மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் \ சான்றோன் எனக்கேட்ட தாய்.69
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை \ என்நோற்றான் கொல்எனும் சொல். 70

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment