Pages

Friday, 31 October 2014

புறநானூறு 66 Purananuru 66

சோழன் கரிகாற் பெருவளத்தான்


களிப்புநடை போடும் 
யானைமேல் தோன்றும் கரிகால் வளவ!

கடலில் நாவாய்க் கப்பல் ஓட்டிக் 
காற்றையே ஆண்ட வலிமையாளரின் வழிவந்தவன் நீ.

நீ போரில் வென்றாய். 
அதனால் நீ நல்லன்.

எனினும் 

வெண்ணிப் பறந்தலைப் (போர்க்களத்தில்) போரில் 
உன் வலிமை மிக்க தாக்குதலால் 
புறப்புண் பட்டு அதற்காக நாணி 
அப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து 
உயிர் துறந்த மன்னன் (பெருஞ்சேரலாதன்) 
உன்னைக் காட்டிலும் நல்லவன் அல்லனோ?

பாடல்

நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே  5
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே?

திணை வாகை; 
துறை அரச வாகை.
சோழன் கரிகாற் பெருவளத்தானை 
வெண்ணிக் குயத்தியார் 
பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

களி இயல் யானைக்
கரிகால் வளவன்



No comments:

Post a Comment