சேரமான் கோக்கோதை மார்பன்
கடற்கானலில் உள்ள தொண்டி நகரம் மணம் கமழும்
நல்லூர்.
அரசன் தோதையின் மார்பில் இருக்கும்
கோதைமாலையின் மணம்,
அவனைத் தழுவுவோர் அணிந்துள்ள
மலர்மாலையின் மணம்,
கழியில் பூத்திருக்கும் நெய்தல் பூவின் மணம்
ஆகியவற்றால் தொண்டி
தேன்-மணம் கமழும் ஊர்.
அது என் ஊர்.
அதனை ஆளும் கோதை என் அரசன்.
முதுவாய் இரவல (புலவனே)!
அவனிடம் நீ சென்று அவனைக் கண்டு மீண்டால்
என்னையே நீ நினைக்கமாட்டாய்.
போரில் அவன் மேம்படும்போதெல்லாம்
உன் மேம்பாட்டையே
அவன் கருதுவான்.
பாடல்
கோதை மார்பின் கோதையானும்,
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்,
மாக் கழி மலர்ந்த நெய்தலானும்,
கள் நாறும்மே, கானலம் தொண்டி;
அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்; 5
அன்னோற் படர்தியாயின், நீயும்
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல!
'அமர் மேம்படூஉம் காலை, நின்
புகழ் மேம்படுநனைக் கண்டனம்' எனவே.
திணை பாடாண் திணை;
துறை புலவராற்றுப் படை.
சேரமான் கோக்கோதை மார்பனைப்
பொய்கையார் பாடியது.
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.
2 ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment