சோழன் நலங்கிள்ளி
அரசன் நலங்கிள்ளிக்கு
உறையூர்ப் புலவர் முதுகண்ணன்
சாத்தனார் கூறும் அறிவுரை இது.
- மனவளம் குன்றிய சிதடு,
- உறுப்புக் குறையுள்ள உடல்,
- கூன் (முதுகு வளைவு),
- குள்ளம்,
- ஊமை,
- செவிடு,
- விலங்குத் தன்மை,
- பித்து
ஆகிய எட்டும்
அச்சம் தரும் பிறவிகள்.
இவற்றுடன் வாழ்வது நலமில்லா வாழ்க்கை என்று
அறிந்துணர்ந்த முன்னோர்
கூறியுள்ளனர்.
அதனைப் பற்றி இன்னும் சொல்கிறேன். கேள்.
தினைப்புனம் காப்போர் (யானை வருவதை) அறியும் வகையில் பறவைச் சேவல் கூவிக் காட்டும் கானம் உடையவர் நின் பகைவர்.
கோட்டையை முற்றுகையிட்டிருப்பவர்களுக்கு
அறம் உணர்த்தும் வகையில் கோட்டைக்குள் இருப்போர்
கரும்பு அம்பு எய்து காட்டுவர்.
எனினும் அது அகழியில் உள்ள தாமரைப் பூவைச் சிதைக்கும்.
எனினும் அது அகழியில் உள்ள தாமரைப் பூவைச் சிதைக்கும்.
கூத்தரின் ஆடுகளம் போன்றது நீ பெற்றிருக்கும்
நாடு.
இந்தச் செல்வமானது
அறம், பொருள், இன்பம்
மூன்றும் விளைவிக்க வல்லது.
உன் நாடாகிய செல்வம் உனக்கு அவற்றைத் தரவில்லையாயின்
நீ
உன் நாட்டைப் போற்றவில்லை என்பதே பொருள்.
பாடல்
'சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்' என,
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம் பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே,
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப்
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர்
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே;
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும், பெரும! நின் செல்வம்;
ஆற்றாமை நிற் போற்றாமையே.
- திணை பொதுவியல்;
- துறை முதுமொழிக்காஞ்சி.
- சோழன் நலங்கிள்ளியை
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
காலம்
: கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)

No comments:
Post a Comment