Pages

Monday, 6 October 2014

புறநானூறு 25 Purananuru 25

பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்


கல்லாடனார் நெடுஞ்செழியனுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

தலையாலங்கானப் போர்க்களத்தில் 
திங்களும் ஞாயிறும் மறைவது போல, 
சோழன், சேரன் ஆகிய 
இருபெரு முரசுகளைக் கைப்பற்றும்போது 
அவர்களது மனைவிமார் 
கைமைக் கோலத்தில் 
மார்பில் அடித்துக்கொள்ளாவண்ணமும், 
கூந்தல் களையாவண்ணமும் 
பார்த்துக்கொள்க. 

பகைவர்களைக் கொல்ல வேண்டாம் 
போர் வேண்டாம்
என்பது கருத்து

பாடல்

மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,
உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு,
நிலவுத் திகழ் மதியமொடு, நிலம் சேர்ந்தாஅங்கு,
உடல் அருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி,
பிணியுறு முரசம் கொண்ட காலை,
நிலை திரிபு எறிய, திண் மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ, நின் வேல் செழிய!
முலை பொலி ஆகம் உருப்ப நூறி,
மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே.
  • திணை வாகை; துறை அரச வாகை.
  • பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் 
  • கல்லாடனார் பாடியது.
காலம்     : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)

கைம்பெண்ணின் குவை இருங் கூந்தல் கொய்தல்



No comments:

Post a Comment