வளம் பெருக வேண்டும்
- மழை பருவத்தில் ஊற்ற வேண்டும்.
- காட்டில் ஆண் பெண் மான்கள் சேர்ந்து மேய்ந்து திளைக்க வேண்டும்.
- பறவைகளும் வண்டுகளும் மரங்களில் ஒலிக்க வேண்டும்.
- பழங்களும், கிழங்குகளும் மிகுதியாக விளைய வேண்டும்.
- ஆனிரைகள் புல்லை மேய்ந்துகொண்டு துள்ளி விளையாட வேண்டும்.
- தானிய விளைச்சல் பெருக வேண்டும்.
- பல ஊழிக் காலங்கள் இப்படி இருக்க வேண்டும்.
நோய் இலை ஆகியர்
- இரும்பொறை!
- உன் ஆட்சியின் செம்மையால் இவை நிகழ வேண்டும்.
- நாட்டு மக்கள் உன்னை வாழ்த்த வேண்டும்.
- தேவர்கள் உன்னைப் போற்ற வேண்டும்.
- உன் ஆட்சியில் பிழை நேரக்கூடாது.
- போர்களில் நீ வெல்ல வேண்டும்.
- நோய் இல்லாமல் நீ இருக்க வேண்டும்.
உன் மனைவி
- அடக்கமான நெஞ்சம் கொண்டவள்.
- தவறு செய்யத் தெரியாதவள்.
- கனவிலும் உன்னை விட்டுப் பிரியாதவள்.
- குளுமைக்காகத் தகர எண்ணெய் பூசிய கூந்தலை உடையவள்.
- மணம் முடித்த பெண்களின் பாதுகாப்பைப் பெற்றிருப்பவள்.
- வடமீன் போன்ற கற்புடையவள்.
- இவளுடன் சேர்ந்து நீ பொலிவு பெறவேண்டும்.
0
May prosperity abound.
- May the rains pour down in season.
- May male and female deer graze and frolic together in the forest.
- May the sounds of birds and insects fill the trees.
- May fruits and tubers grow in abundance.
- May herds of cattle graze on the grass and frolic playfully.
- May the harvest of grains multiply.
- May it remain thus for aeons to come.
May you be no disease
- Irumporai!
- May these things come to pass through the excellence of your rule.
- May the people of the land praise you.
- May the celestials bless you.
- May no error mar your reign.
- May you triumph in battles.
- May you remain free from disease.
Your wife
- She possesses a modest heart.
- She is incapable of wrongdoing.
- She never parts from you, even in dreams.
- She has hair anointed with cooling oil.
- She enjoys the protection accorded to married women.
- She is as chaste as the North Star.
- May you flourish in union with her.
0
ஒன்பதாம் பத்து பாட்டு - 89 இதன் முந்தைய பதிவு
வானம் பொழுதொடு சுரப்பக் கானம்
தோ(டு)உறு மடமான் ஏறுபுணர்ந்(து) இயலப்
புள்ளும் மிஞிறும் மாச்சினை ஆர்ப்பப்
பழனும் கிழங்கும் மிசைஅற(வு) அறியாது
பல்ஆன் நல்நிரை புல்அருந்(து) உகளப் 5
பயம்கடை அறியா வளம்கெழு சிறப்பின்
பெரும்பல் யாணர்க் கூலம் கெழும
நன்பல் ஊழி நடுவுநின்(று) ஒழுகப்
பல்வேல் இரும்பொறை நின்கோல் செம்மையின்
நாளின் நாளின் நாடுதொழு(து) ஏத்த 10
உயர்நிலை உலகத் (து) உயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செருமேம் தோன்றி
நோய்இலை ஆகியர் நீயே நின்மாட்(டு)
அடங்கிய நெஞ்சம் புகர்படு(பு) அறியாது
கனவினும் பிரியா உறையுளொடு தண்எனத் 15
தகரம் நீவிய துவராக் கூந்தல்
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து
வாழ்நாள் அறியும் வயங்குசுடர் நோக்கத்து
மீனொடு புரையும் கற்பின்
வாள்நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே. 20 (89)
- பெயர்: துவராக் கூந்தல்
- துறை: காவல்முல்லை
- வண்ணம்: ஒழுகுவண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பதிற்றுப்பத்து - சங்ககாலம் - தொகுப்பு நூல் - ஒன்பதாம் பத்து - இளஞ்சேரல் இரும்பொறையை, பெருங்குன்றூர்கிழார் பாடிய பத்துப் பாட்டு.
No comments:
Post a Comment