- பிறர் மறைவாகப் பேசுவதைக் கேட்பதில் செவிடனாக இரு.
- அடுத்தவன் மனைவி வரும்போது குடுடனாக இரு.
- ஒருவனைப் பற்றி அவனுக்குத் தெரியாமல் இன்னொருவனிடம் சொல்லும்போது ஊமையனாக இரு.
- இப்படி இருந்தால் உனக்கு மற்றவர் ‘நல்லது எது’ என்று கூறவேண்டியதில்லை.
- Be deaf to private conversations held by others.
- Be blind when another man's wife passes by.
- Be mute when speaking to someone about another person behind their back.
- If you conduct yourself this way, others will not need to tell you what is right.
பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்
தேதிலா ரிற்கட் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு. 158
சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார்
No comments:
Post a Comment