Pages

Monday, 1 June 2026

புலந்திரன் களவு மாலை Pulanditran Kalavu Malai 94

பக்கம் 82

காந்தாரி கருவுற்றிருப்பது பற்றி அவளது தோழியர் கும்பல் கும்பலாகக் கூடிப் பேசினர். 

துரியோதனன் இதனை அறிந்தான். 

தனக்குக் கவரி வீசும் பெண்ணை வினவினான்.
என்னவோ ரகசியம் பேசப்படுகிறதே. அது என்ன என்றான். 

பாண்டியர் ஐவரும் படைகூட்டி வந்தாரோ
ஆணகர் பாண்டியரின் ஐவர் வெளிட்டடாரோ
கட்டழகர் பாண்டவர்கள் காலாள் வருகிறதோ
தருமரது தம்பியர்கள் தனஞ்செயர்கள் வாராயோ
அம்பலத்து ரகசியங்கள் அறிந்து வா
என்றான். 

தாதி வந்தாள் 
கேட்டாள் 
ஆரும் எதுவும் சொல்லவில்லை 

மாதவர் குருக்கள் ஒருவரைக் கேட்டாள். 
அவரும் தயங்கினார்.

துரியோதனன் உப்பைத் தின்றுகொண்டு சொல்ல நடுங்குவது ஏன் என்றாள். 

அல்லிமகன் புலந்திரன்
கலந்தாரி 
இருவருக்கும் குழந்தை உண்டாகியிருக்கிறதாம் - என்றார். 

துரியோதனன் தேசத்து அழகு மன்னன்.
அவனிடம் தோழி சொல்கிறாள்

அல்லி மகன் புலந்திரனால் கலந்தாரிக்கு மசக்கையாம் - என்றாள் 

துரியோதரன் கர்னனைத் திட்டுகிறான் 

ஆற்றில் வந்தவனை எடுத்து வளர்த்தேன் 
தேர்ப்பாகன் என்று சொல்லாமல் வளர்ந்தேன் 
எனக்கு உள்ளாளாய் மாறிவிட்டானே 
என்றான். 

துரியோதனன் தன் மனைவி பெருந்திருவாளிடம் தனிமையில் சென்றாள் 

தனித்து வரக் காரணம் என்ன - என்றாள்

கர்னரை உத்தமன் என்று வளர்த்தேனே
அவன் பாதுகாப்பில் இருந்த கலந்தாரி வயிற்றில் புலந்திரன் மகனாம் 
பெருந்துரோகம் செய்விட்டன் பாழ்த்தாயா - என்றான் 

பெருந்திருவாள் கூறுகிறாள்

சிவசிவா என்று திருச்செவியில் கை வைத்தாள் 
அரகரா என்று ஆரணங்கு முத்து உதிர்த்தாள்

கர்னர் இதுவரை நமக்கு எந்தத் துரோகமும் செய்யவில்லை.
 
நான் போய் உண்மையை அறிந்துவருகிறேன் - என்றாள். 

அப்போது கர்னர் அங்கு வந்தார். 

ஆதித்தன் புத்திரனார் அங்க வள நாட்டழகன் 
கெங்கையில் வந்த கீர்த்திப் பிரதாபன் 
வைகைப் பெருகி வர வந்தவன்காண் கர்னவர் 
வேட்டைகள் ஆடி வாரார் வேந்தர் பெருமானும் 
வெள்ளித் தடிக்காரர் வீரியமாய்ச் சூழ்ந்துவர 
துள்ளும் படைவீரர் துடிப்புடனே சூழ்ந்து வர 
கண்டாயோமாதே நீ கர்னர்   செய்த காரியத்தை
என்றான், துரியோதனன் 

கர்னர் விருது முழக்கத்துடன் வந்தார். 
வேட்டையாடிக் கொண்டுவந்த பொருள்களைத் துரியோதனனுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்

பெருந்திருவாளைக் காணச் சென்றான் 

பெருந்திருவாளை வணங்கினான் 

வாழ்வீர் வளர்வீர் என்று அவள் வாழ்த்தினாள். 

நிற்பீர் நிலைதரிப்பீர் நீர் அரசை ஆண்டிடுவீர் 
நீரே அரசாள்வீர் நீடூழி காலமெல்லான் 
இருவர் நடுவாக இருந்தீர் - என்றாள் 

கர்னரை ஏறிட்டுப் பார்த்தாள் 
அவன் வாட்டமுடன் காணப்பட்டான் 
வாட்டம் ஏன் - என்றாள் 
சற்று முன்தான் என் கணவரும் வந்தார் 

பசி என்றார் 
இருவரும் நீராடிவிட்டு வாருங்கள் 
என்றாள்

இருவரும் நீராடினர் 
திறுநீறு அணிந்தனர் 
சிவனை வழிபட்டனர் 

இருவரும் கை கோத்துக்கொண்டு உணவுண்ண வந்தனர். 

அமர தரையில் தடுக்கு போடப்பட்டது 
முன்னே முக்காலி போடப்பட்டது
அதில் தளிகை என்னும் வட்டியில் உணவு பரிமாறப்பட்டது 

உண்டனர்
வெற்றிலைப் பாக்கு போட்டுக்கொண்டனர் 

கொலு மண்டபம் வந்தனர் 
காண வந்த மன்னர்களைக் கையமர்த்தினர் 

துரியோதிரன் கர்னரைக் கேட்கிறான் 

நீ
ஆற்றோடு போகாமல் 
சேற்றுமணலில் அழுந்தாமல் 
மாற்றி வளர்த்தேன் 

பிள்ளைக்குப் பிள்ளையாய் வளர்த்தேன் 

தேர்ப்பாகனிடமிருந்து பெற்று மகுடம் சூட்டி அரசன் ஆக்கினேன் 

எப்போது என்ன தீங்கு செய்தேன் - என்றான்

கலந்தாரியை அவள் மாமியார் வீட்டிலோ என் வீட்டிலோ வைக்காமல் தனியாக அரண்மனை கட்டி வைத்திருந்தேன்.

இப்போது அவளுக்கு மைந்தன் உண்டாகிவிட்டான் - என்றான் 

கர்னர் ‘சிவசிவா’ என்று காதைப் பொத்திக்கொண்டார். 

உண்பது உன் சோறு 
ஆள்வது உன் அரசு 
இது போதும் 
வேறு சென்மம் எனக்கு வேண்டாம் 

இப்போதே செத்து மடிந்திடுவேன் என்று தன் வாளை உருவிக்கொண்டு கர்னர் நின்றார். 

துரியோதனன் கர்னருக்குப் பின்புறமாக வந்து கட்டி அணைத்துச் சமாதானப்படுத்தினானான். 

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர், 
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் 
எளிய நடையில் 
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல் 
(பாடல் பகுதிகளுடன் கதை)

No comments:

Post a Comment