Pages

Sunday, 31 May 2026

புலந்திரன் களவு மாலை Pulanditran Kalavu Malai 82

பக்கம் 67

கலந்தாரிக்குக் கற்பம் உண்டாயிற்று 
மூன்று மாதம்

படுக்கையிலிருந்து எழுந்திருக்கத் தள்ளாடினாள்
எண்ணிப் பார்த்தாள் 

ஒருவேளை மட்டும் உண்டாள் 

கழுத்தின் அடிப்பகுதி நேர்ந்து போயிற்று 
முகத்தில் வேறுபாடு காணப்பட்டது 

மைத்துனன் வந்தாரோ - என்று தோழியர் கேலி செய்தனர். 

கர்னர் வந்தபோது தாதியர் தெரிவித்தனர்

கர்னன் வேட்டைக்குச் சென்றான்
மண்டபத்தில் தங்கி, சிந்து கவிகள் கேட்டுக்கொண்டிருந்தான்
 
அல்லியின் தூதுவர்கள் அங்கு வந்தனர் 

ஆறாயிரவர் பாண்டியர் ஆண்ட நாட்டை ஆள்பவள் அல்லி 
அவள் அனுப்பிய தூதுவர் நாங்கள். 
அவள் மகன் புலந்திரனுக்குக் தூதாக வந்துள்ளளோம் என்றனர் 

கர்னன் தரும முடியழகன் 

கலந்தாரியின் தாதியரை அழைத்தான் 
கலந்தாரி ஏன் வாடியிருக்கிறாள் - என்றான்

தலை நோகிறது என்று சொல்லிக்கொண்டு சரியாகச் சாப்பிடவில்லை 
அதனால் வாடியிருக்கிறாள் - என்றனர் 

துரியோதனனுக்கும் அவன் தம்பியர்க்கும் பிள்ளை இல்லை
அவள் ஆரை நினைக்கிறாள் - எனக் கர்னன் வினவினான். 

காந்தாரியிடம் கண்ட குறிப்பைச் சொல்லுங்கள் - என்றான் 
ஒரு குறியும் தெரியவில்லை - என்றனர் 

கர்னன் பணிப்பெண்டுகளை மிரட்டிக்கொண்டிருந்தான். 

தூதுவர் சொன்னவை

பாண்டவர் வனவாசம் போனது முதல் அல்லியரசி மாதம் ஒருமுறைதான் கொலு-மண்டபம் வருகிறாள். 

நாட்டை அவள் மகன் புலந்திரனே ஆண்டுகொண்டிருக்கிறான் - என்றனர்

கர்னன் தனக்குக் கவரி வீசிய பெண்களில் ஒருத்தியை அனுப்பி, கலந்தாரியை அழைத்துவருமாறு கூறினான்.

அவள் கலந்தாரி மண்டபம் சென்றாள்

திருவே  உருவழகே  செல்வப் பெருந்தேவே
அத்தி நகருடைய அலங்காரப் பூஷணமே
அன்னமே உன்னுடைய அம்மானும் வந்தார்காண்
மங்கையரே உம்முடைய மாமனும் வந்தார்காண் 
காசி நகர் ஆளும் கர்ணர் இங்கு வந்தார்காண் 

என்றனர்

  • இங்கே அல்லியின் தூதர்கள் கர்னர் தந்த கொடைகளைப் பெற்றுக்கொண்டு திரும்பினர். 

கர்னன் கலந்தாரியின் மண்டப வாயிலுக்கு வந்தான்
கர்னன் தரும முடியான் 

கலந்தாரி வேடிக்கை பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தாள்.   
காந்தாரியின் தாய் துற்சடையை அழைத்துவரச் சொன்னான்.
துற்சடை வந்தாள்

பட்டுப் பள பள என்னப் பாடகக் கால்  சோதிமின்ன
முத்து மினு மினு என்ன மோதிரக்கால் சோதி மின்ன 

துற்சடை வந்தாள்.

அண்ணா ஏன் வாட்டத்துடன் இருக்கிறாய் 
இடும்பவனன் ஏதாவது ஏடாகூடம் செய்தானா என வினவினாள்

கலந்தாரிக்குப் பொல்லா மசக்கை வருகிறதாம் - என்றான்
இதனைக் கேட்ட தாய் திடுக்கிட்டாள். 
தன் வயிற்றைப் பிசைந்துகொண்டாள் 

மகள் கலந்தாரியைக் காண வந்தாள்

பல்லக்கில் வந்தாள் 
18 வாயில்களையும் தாண்டி வந்தாள் 
பல்லக்கை விட்டு இறங்கினாள்
உள்கட்டுக்குள் நுழைந்தாள் 

ஊர முளையாளை அழைத்துவா என்றாள் 

தாதியர் சென்றனர் 

அழகே திருவுருவே அலங்காரப் பூஷணமே
அன்னமே சொர்னமே அமிர்த மடமானே
சாந்து கழுத்தியரே சந்தனப் பூ மேனியரே 
ஆரணங்கே உம்முடைய ஆச்சி அழைக்கின்றாள்காண் 
என்றனர். 

கலந்தாரி ஓடிவந்து தாயை வணங்கினாள் 

வாழ்வீர் வளர்ந்திடுவீர் மாயன் அடி பெறுவீர் 
அத்திபுரம் ஆள அரசுகளைப் பெற்றிடுவீர் 

என்று வாழ்த்தினாள் 

கண்களிலே ஒற்றிக் கனிவாயில் முத்தமிட்டு
கற்பூரத்தின் அன்னதொரு கனிவாயை முத்தமிட்டு 
வண்டார் குழலாரை வாய் நெருடி முத்தமிட்டு 
ஏறிட்டுப் பார்த்தாள் இளங்கொடியாள் சீர் வடிவை 
பார்த்தாள் பலகாலும் பார்த்தன் மருமகளை

கர்னர் உரைத்தது பொய் என்று எண்ணினேன் 
அது மெய் என்று தோன்றுகிறது. 

விசயன் மகன் வந்தானோ
அல்லி அனுப்பி வைத்தாளோ
அவன் ஆகாயப் புரவியில் வந்தானோ 
என மகளை வினவினாள் 
மகள் விடை ஏதும் சொல்லவில்லை 
தன் காலிலுள்ள சிலம்பைப் பார்த்துக்கொண்டு நாணத்துடன் நின்றாள்

தாய் ஆணை

மன்னவர்கள்மீது ஆணை
அல்லிமீது ஆணை
காடு உறையும் பாண்டவர்கள்மீது ஆணை 
மயிர் விரித்துக்கொண்டு சென்ற பாஞ்சாலிமீது ஆணை
உன் மைத்துன்மீது ஆணை
என்மீது ஆணை 
சொல் என்றாள்

கலந்தாரி கண்களிலிருந்து முத்துகள் உதிர்ந்தன 

துற்சடை தொடர்கிறாள் 

கர்னர் சாவேன் என்கிறார் 
கர்னர் இறந்தால் நூற்றுவர் மாள்வர்
என்றாள்

கலந்தாரி சொல்கிறாள் 

அருச்சுனர் மகனார் வந்தார் 
ஆகாயப் புரவியில் வந்தார் 
ஆரும் அறியாமல் வந்தார் 
என்னுடன் இருந்துவிட்டுச் சென்றார் 

என்றாள் 

அடையாளம் என்ன 

மாணிக்கப் பேழையில் வைத்திருக்கிறேன் என்றாள்
முத்திரை மோதிரத்தை எடுத்து வந்து காட்டினாள்

தாய் மகிழ்ந்தாள் 
பூரித்தாள் 
திரும்பினாள் 

  • கலந்தாரி கணவன் தந்த மோதிரத்தை இப்போது தன் விரல்களில் அணிந்துகொண்டாள். 

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர், 
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் 
எளிய நடையில் 
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல் 
(பாடல் பகுதிகளுடன் கதை)

No comments:

Post a Comment