Pages

Saturday, 30 May 2026

புலந்திரன் களவு மாலை Pulanditran Kalavu Malai 67

பக்கம் 60

புலந்திரன்


காந்தாரியைப் புணந்த புலந்திரன்
தாயிடம் மீண்டான்
சிங்காரத் தோட்டம் விட்டுத் தென்மதுரை வந்தான் 

தாயை வணங்கினான் 
அப்போது சொக்கநாதர் கோயில் முரசு முழக்கம் கேட்டது 
பல்லி தென் திசையிலிருந்து ஒலித்தது

சந்தனத்தை வாரி உடம்பில் வீடியது போல உள்ளம் குளிர்ந்தாள் 
பணிந்த மகனை வாழ்த்தினாள்
வாழ்க
வளர்க
பிள்ளை பெறுக
பெருமாள் பதம் பெறுக
கற்பத் தூண் போல் கலங்காமல் அரசாள்க
என்றாள்
மகிழ்வோடு தழுவிக்கொண்டாள்

ஆசனம் போட்டார்கள்
நிகழ்ந்தவை எல்லாவற்றையும் மகன் கூறினான்
புரவியைப் பூங்காவனத்தில் விட்டுவிட்டதாகத் தெரிவித்தான் 

கலந்தாரி


அத்தைமகன் நினைவில் உறங்கினாள் 

தோழியர்
வந்தனர்
பார்த்தனர்
ஆடை அவிழ்ந்து அலங்கோலமாய்க் கிடந்தாள் 
அணிகலன்கள் கலைந்திருந்தன 
அவள் உடம்பில் சந்தனம் பூசப்பட்டிருந்தது
எழுப்பினால் எழுந்திருக்க மாட்டாள் என்று பேசிக் கொண்டனர் 
சாமரையால் விசிறினர்

கண் விழித்தாள்
கண் காட்டிளாள்
தோழியர் வெளியேறினர் 

தாய்போல் வளர்த்தவள் மட்டும் இருந்தாள்
தன் மடியில் வைத்துக்கொண்டு வினவினாள்
உன் மேனியில் மாற்றம் எப்படி வந்தது
உன் வாயிலிருக்கும் வெற்றிப்பாக்கு மணம் இந்த நாட்டு மணம் இல்லை
அருச்சுனன் மகன் வந்தானோ
என்றாள்

சினந்தாள் 

"ஏண்டி நீ தாதிகளே இடும்புகளைப் பேச வந்தாய்"
மதுரையில் இருக்கும் அவர் இங்கே எப்படி வந்திருப்பார்

கற்கோட்டை
கர்னர் காவல்
தாதிகளாகிய உங்கள் காவல் இவற்றைக் கடந்து எப்படி வரமுடியும் 
என்றாள்

கர்னன் கேட்டால் எங்களுக்குக்குத்தான் சேதம் 
அறியாமல் சொல்லிவிட்டோம் 
பொறுத்துக்கொள்ளுங்கள் 
என்றனர்
போய்விட்டனர்

கலந்தாரி

பல்லை விளக்கி வாய் கொப்பளித்தாள் 
தாதியர் வழக்கம் போல் ஒப்பனை செய்துவிட்டனர். 
முக்காலி வைத்து உணவு பறிமாறினர் 

பத்து வகைக் காய்கறிப் பொறியல் 
பதினெட்டு வகைப் பச்சடி 
புத்துருக்கு நெய்
பொற்செம்பில் வெந்நீர் 
வைத்தனர் 

உண்டாள்
அடைக்காயும் வெள்ளிலையும் கொடுத்தனர் 
மென்றாள் 

சந்தனம் பூசிவிட்டனர் 
ஆனந்தமாய் இருந்தாள் 
பூதித்து இருந்தாள். 

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர், 
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் 
எளிய நடையில் 
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல் 
(பாடல் பகுதிகளுடன் கதை)

No comments:

Post a Comment